தமிழில் விளக்கம்

HOME


Life in the UK and English Tests - தமிழில் விளக்கம் 

புதிய பாடநெறி

2013ம் ஆண்டு புதிய பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி நடை பெறும் பரீட்சை ஏற்கனேவே சற்று கடினமானது என்பது பொதுவான கருத்து. இந்நிலையில் இது போதுமானது அல்ல, இன்னும் கடினமான  பாடநெறி அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்து உள்ளது.

புதிய பாடநெறி தயாரானதும் பரீட்சை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பார்கள்.

ஆகவே இப்போதுள்ள பாடநெறியின் கீழ் விரைவாக சித்தி அடைவதே புத்திசாலித்தனமானது.

நாம் எவ்வகையில் உதவுகின்றோம் 

வருடத்தில் குறித்த மாதத்தில் தவறாது நடைபெறும் பாடசாலைப் பரீட்சைகள் போலல்லாது, LIFE IN THE UK பரீட்சையானது நீங்கள் விரும்பும் போது எடுக்கக் கூடிய வகையில் உள்ளது.

இதன் காரணமாக, உங்களுக்கு சரியான பயிற்சியை எடுக்க முடியாதது நிதர்சனம். அதாவது, ஒருவர் அல்லது இருவக்காக, ஒரு நிறுவனம் அல்லது ஒரு ஆசிரியர் வகுப்பு நடத்துவது, ஒரு செயல்திறன் மிக்க நடவடிக்கை அல்ல என்பதை எமது 8 வருட அனுபவத்தில் உணர்ந்தோம்.

ஆகவே நாம், இந்த பாடநெறியை, ஒரு Software நிறுவனத்தின் உதவியுடன் நவீன முறையில் விடியோவாக பதிவு செய்துளோம்.

ஆங்கிலத்தில் 8 மணிநேர காணொளியும், ஒவொரு அத்தியாயத்துக்கும், அதன் உப அத்தியாயத்துக்கும் கீழாக அதற்கான கேள்விகளுமாக தந்துளோம்.

இந்த பாடத்திட்டம் £149 க்கு கிடைக்கிறது.

நீங்கள் ஆங்கிலத்துடன், தமிழிலும் விளக்கம் பெறுவது நல்லது என விரும்பினால், 8 மணி நேர ஆங்கில காணொளியும், 8 மணி நேர தமிழ் காணொளியும் ஆக மொத்தம், 16 மணி நேர காணொளியும் தனி பாடத்திட்டமாக தந்துளோம். 

இந்த பாடத்திட்டம் £199 க்கு கிடைக்கிறது.

இரு பாடத்திட்டமும் 3 மாத 'நுழைவு' கொண்டதாக இருக்கும். மேலும் நேரம் தேவையாகின் எம்மை தொடர்பு கொள்ளலாம். 

ஆகக் கூடிய நுழைவு அனுமதி காலம் 6 மாதங்கள். 

ஆங்கில வகுப்புகள் 

நாம் ஆங்கில வகுப்புகளையும் நடாத்துகின்றோம். இது இணைய வழி மூலமே நடக்கின்றது.

எமது வகுப்புகள், அடிப்படை அறிவு குறித்த பரீட்சைகளை மட்டுமே கருத்தில் கொள்ளாது,  முழுவதுமான ஆங்கில அறிவை (Competency in English Language) தரும் நோக்கம் கொண்டது.

நீங்கள் இந்த வகுப்புகளில் ஆர்வம் கொண்டால், உங்கள் ஆர்வத்தினை கீழே உள்ள லிங்க்கில் பதிவு செய்து கொள்வும். இதற்கு கட்டணம் இப்போது செலுத்த வேண்டியதில்லை. இந்த வகுப்புகள் எப்படி நடைபெறும் என்று அறிந்துகொள்ள கூடிய வகையில் சில மாதிரி வகுப்புகள் நடத்தப்படும்.

வேறு வகுப்புகள் 

மேலும், Driving Theory Test, London PCO English Test போன்ற பல வகுப்புகளையும் நடத்துகின்றோம். அதே லிங்கில் பதிவு செய்து கொள்ளுங்கள். போதுமான அளவு மாணவர்கள் சேர்ந்ததும் அடுத்த வகுப்பு ஆரம்பமாகும் திகதி குறித்து விபரம் தெரிவிப்போம்.

Lets us know your interest and we will contact you. Also, we can bundle both 'Life in the UK' and 'English' with a discount. 

(please select the correct option in the dropdown) 

Register Now

மேலே தரப்பட்டுள்ள Menu வில் உள்ள 'Sample Videos'  மாதிரி காணொளிகள் (வீடியோக்கள்) தரப்படுள்ளன. 

மேலும் ஒரு பாடத்திட்டத்தினை வாங்கி பயில ஆரம்பிக்கும் வகையில், எவ்வாறு புதிய கணக்கு ஒன்றினை ஆரம்பித்து, பாடநெறி ஒன்றை வாங்கி கொள்வது என என மேலே தரப்பட்டுள்ள Menu வில் 'How To Join A Course' விபரங்கள் உள்ளன.

நன்றி

ஐக்கிய ராஜ்யத்தில் உங்கள் வெற்றிக்காக:

greatbritishlife.org